இறைவர் : அருள்மிகு ஸ்ரீ அனந்தீஸ்வரர்
இறைவி :ஸ்ரீ சௌந்திரநாயகி
தல மரம் : மரம்
தீர்த்தம் :
அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத ஸ்ரீ அனந்தீஸ்வரர் திருக்கோயில் - சிதம்பரம்
ஆதிசேஷன், ஒருநாள் பெருமாளின் உடல் எடை அதிகரித்ததை எண்ணி வியந்தார். அதற்கான காரணத்தை நாராயணரிடமே கேட்டார். அதற்கு நாராயணர், "கயிலாயத்தில் சிவன் ஆனந்த தாண்டவம் ஆடிய காட்சியை நினைத்த மாத்திரத்தில் எனது உடலில் சக்தி கூடியது" என்று கூறினார். இதைக் கேட்டதும் தானும் அந்தக் காட்சியை காண வேண்டும் என்று தன் விருப்பத்தை ஆதிசேஷன் வெளிப்படுத்தினார். அப்படியானால் பூலோகத்தில் பிறந்து வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனின் ஆனந்த தாண்டவத்தை தரிசனம் செய்து வா என அனுப்பினார். அதன்படி அத்திரி மகரிஷி- அனுசுயா தேவி தம்பதியரின் மகனாக அவதரித்தார். அவருக்கு பதஞ்சலி என்ற பெயர் வைக்கப்பட்டது. பதஞ்சலி முனிவர், தன்னுடைய ஏழு நண்பர்களுடன் இணைந்து நந்திதேவரிடம் இருந்து இறைவழிபாட்டுடன் இணைந்த, மனம், வாக்கு, உடல் சுத்தம் என்னும் வாழ்க்கைக் கலையைக் கற்றுத்தேர்ந்தார். அதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல ஊர்களுக்கும் சென்றார். அதன் ஒரு பகுதியாக தன் பிறப்புக்கு காரணமான நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவம் காணும் விருப்பதின் அடிப்படையில் சிதம்பரம் வந்து சேர்ந்தார். : சிதம்பரத்தில் மேற்கு திசையில் இருப்பிடம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார். மேலும் அந்த இடத்தில் நாள்தோறும் வழிபாடு செய்வதற்காக லிங்கம் ஒன்றை உருவாக்கினார். அருகில் தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கினார். லிங்கம், பதஞ்சலி முனிவரின் பூர்வஜென்ம பெயரான அனந்தன் என்பதன் அடிப்படையில் அனந்தீஸ்வரர் என்றும், தீர்த்தம் இப்பிறவி பெயரான பதஞ்சலி என்பதன் அடிப்படையில், பதஞ்சலி தீர்த்தம் என்னும் வழங்கப்பட்டது. சோழ மன்னர்கள் இக்கோயிலை கிழக்கி நோக்கிய தலமாக அமைத்தனர். பல தேசத்தில் இருந்தும் சிதம்பரம் நடராஜ பெருமானின் ஆலய அர்த்தசாம பூஜையைக் காண்பதற்காக மகான்கள், மன்னர்கள், முனிவர்கள் வருகைத் தருவார்கள். அவர்கள் அனைவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த இந்தக் கோவிலை பகல் நேரத்தில் வழிபட்டதால், இவ்வாலயத்தின் உச்சிகால பூஜை பிரசித்திப்பெற்றது.
ஆலயத்தின் வெளி வாசலை தாண்டி உள்ளே சென்றால், சுற்றுச்சுவருடன் கூடிய அனந்தீஸ்வர தீர்த்தம் உள்ளது. பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்ட இந்த தீர்த்தம், இந்த ஆலயத்திற்கு மட்டுமின்றி, சிதம்பரம் நடராஜரின் பத்து தீர்த்த குளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இரண்டாம் வாசலை தாண்டி, இடதுபுறத்தில் விநாயகரும் ராஜசண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். இரண்டாம் பிரகாரத்தின் இடதுபுறத்தில் பதஞ்சலி முனிவருக்கு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது நட்சத்திரமான பூசம் அன்று இந்த சன்னிதியில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி திருவாதிரை நாளன்று, நடராஜருடன் இவரும் புறப்பாடு ஆகிறார். இறைவன் அனந்தீசுவரர் . இறைவி சௌந்தர்யநாயகி தீர்த்தம் பதஞ்சலி தீர்த்தமாகும் வந்தார். அனைத்து இறை சக்திகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதால் அங்கு அர்த்த சாம பூசையை அனைத்து ரிஷிகளும், முனிவர்களும் தரிசிப்பதாகக் கொள்வர். அவர்கள் உச்சிக்காலத்தில் அனந்தீசுவரரை தரிசனம் செய்வதாகக் கூறுவர். எனவே உச்சிக்காலத்தில் இவரையும் அர்த்த சாமத்தில் சிதம்பரம் நடராசரையும் தரிசிப்பதை சிறப்பு. இவருக்கு அடுத்ததாக சூரிய, சந்திரர் சன்னிதி உள்ளது. இருவரும் அருகருகே இருப்பதால், இத்தலத்தை நித்திய அமாவாசை தலமாக கருதி வழிபாடு செய்கின்றனர். மூன்றாவது, இரண்டாவது பிரகாரங்களை விட, சற்றே உயரமாக அமைக்கப்பட்டுள்ள முதல் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், கஜலட்சுமி அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்தில் வல்லப விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். திருமணத் தடை அகல, அஷ்டபுஜ துர்க்கைக்கு மஞ்சள் புடவை சாத்தி வழிபடுகின்றனர். பிரகாரத்தோடு இணைந்த அர்த்த மண்டபத்தில் தென்முகம் நோக்கி சௌந்திரநாயகி சன்னிதியும், எதிரில் தூண் ஒன்றில் மேற்கு முகம் நோக்கி ஆஞ்சநேயர் சன்னிதியும் இருக்கிறது. மகா மண்டபத்தில் தென் முகம் நோக்கி சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் அருள்பாலிக்கிறார். அவர் அருகில் பதஞ்சலி முனிவர் உள்ளார்.
பிரார்த்தனை:
:
திருக்கோயில் முகவரி :
ஸ்ரீ அனந்தீஸ்வரர் திருக்கோயில் சிதம்பரம் , கடலூர் மாவட்டம். ,
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்
அமைவிடம்:
தில்லை பெருங்கோயிலின் மேற்கு கோபுரத்தின் சன்னதி தெருவில் நேராக காசுக்கடை தெரு, RCTபள்ளியை கடந்து அரை கிமி தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.